சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் கடைகள் அடைப்பு


சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில்  கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 5 May 2022 11:41 PM IST (Updated: 5 May 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சீர்காழி:
வணிகர் தினத்தையொட்டி சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு, கடை வீதி, தென்பாதி, சிதம்பரம் சாலை, ஈசானிய தெரு, ரெயில்வே ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள  கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள்  அடைக்கப்பட்டிருந்தன இதனால்  வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளில்  மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

Next Story