பலத்த சூறாவளி காற்றுக்கு மரங்கள் சாய்ந்தன


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 May 2022 11:41 PM IST (Updated: 5 May 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுக்கு மரங்கள் சாய்ந்தது

நொய்யல், 
கரூர் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பலத்த இடி, சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மின்தடை ஏற்பட்டத்தால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் சூறாவளிகாற்றுக்கு மூலிமங்கலத்தில் இருந்து பாண்டிபாளையம் செல்லும் தார் சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரங்கள் திடீரென வேரோடு சாய்ந்து மின்கம்பி மீது விழுந்ததால் அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தது. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதேபோல்  மூலிமங்கலம் பள்ளி வளாகத்தின் முன்பு இருந்த மரம் ஒன்று பள்ளிக் கட்டிடத்தின் மீது முறிந்து விழுந்தது. அதேபோல் மலைநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் புளியமரம் மற்றும் பல்வேறு மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story