மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 5 May 2022 11:41 PM IST (Updated: 5 May 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்து உள்ளது.

மும்பை, 
மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்து உள்ளது. 
 டிக்கெட் கட்டணம் 
மும்பையில் பயணிகள் வசதிக்காக ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் 44 ஏ.சி. ரெயில்களும், மேற்கு ரெயில்வேயில் 20 ஏ.சி. ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் ஏ.சி. ரெயில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருந்ததால் அதில் குறைந்தளவு பயணிகளே பயணம் செய்து வருகின்றனர். 
இதற்கிடையே ஏ.சி. மின்சார ரெயில் டிக்கெட் கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என கடந்த வாரம் ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகிப் தன்வே அறிவித்து இருந்தார்.
அமலுக்கு வந்தது 
இதையடுத்து ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் குறைக்கப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி 1-5 கி.மீ. பயண கட்டணம் ரூ.65-ல் இருந்து 35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சர்ச்கேட் - போரிவிலி கட்டணம் ரூ.180-ல் இருந்து ரூ.95 ஆகவும், சர்ச்கேட் - விரார் கட்டணம் ரூ.220-ல் இருந்து ரூ.115 ஆகவும் குறைந்து உள்ளது. 
இதேபோல மின்சார ரெயில் முதல் வகுப்பு ரெயில் கட்டணமும் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாதாந்திர பாஸ் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Next Story