மல்லசமுத்திரம் பேரூராட்சியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிப்பு
மல்லசமுத்திரம் பேரூராட்சியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிப்பு
மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சிலர் குடிநீர் வரி செலுத்தாமல் உள்ளதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து குடிநீர் வரி செலுத்த கோரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் குடிநீர் வரியை கட்டவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் வரி கட்டாத 15 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
மேலும் குடிநீர் வரி செலுத்தாதவர்கள் 7 நாட்களில் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே உடனடியாக பேரூராட்சி அலுவலகத்தில் கட்டணத்தை செலுத்துமாறு பேரூராட்சி செயல் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story