மோகனூர் அருகே கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
மோகனூர் அருகே கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
மோகனூர்:
மோகனூர் அருகே என்.புதுப்பட்டியில் இருந்து பரளி சாலை தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 52). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை சாத்தாமல் வீட்டின் உள்அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவருடைய மனைவி கவிதா வீட்டின் முன் பகுதியிலும், தாய் அருக்காணி வாசலிலும் படுத்து தூங்கியுள்ளனர்.
அப்போது இரவு எழுந்த கவிதா திருடன், திருடன் என சத்தம் போடவே சத்தத்தை கேட்டு எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் இருந்து 2 பேர் ஓடினர். இதனை தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சாமி அறையில் வைத்திருந்த 9 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா வழக்குப்பதிவு செய்து நகையை திருடி விட்டு தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story