தாய்-மகன்கள் உள்பட 5 பேர் மீது தாக்குதல்


தாய்-மகன்கள் உள்பட 5 பேர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 5 May 2022 11:51 PM IST (Updated: 5 May 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

தாய்-மகன்கள் உள்பட 5 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மணல்மேடு:
மணல்மேட்டை அடுத்த கொற்கை கிராமத்தில் கடந்த 1-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் அதே ஊரை சேர்ந்த கரிகாலன் மகன் வசந்த் (வயது 30) என்பவருக்கும், அதே ஊரை சேர்ந்த தொழிலாளியான திருநாவுக்கரசு(50) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து திருநாவுக்கரசு அவரது மகன்களுடன்  வசந்த் வீட்டிற்கு சம்பவத்தன்று  சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும், அவரது குடும்பத்தினரையும் கல் மற்றும் கட்டையால் தாக்கினர்.  இதில் காயமடைந்த வசந்த் மற்றும் அவருடைய தாயார் உமாராணி, சகோதரர்கள் புவனேஷ், சதீஷ் உள்பட 5 பேர் மயிலாடுதுறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து புவனேசை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து  திருநாவுக்கரசை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு மகன்கள் பாண்டியராஜன், ஆனந்தராஜ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story