திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,135 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,135 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 5 May 2022 6:24 PM GMT (Updated: 5 May 2022 6:24 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,135 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வுசெய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,135 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வுசெய்தார்.

பிளஸ்-2 பொதுத் தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 56 தேர்வு மையங்களில், 131 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 878 மாணவர்கள், 7 ஆயிரத்து 136 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 14 பேர் எழுத இருந்தனர். 

காலை 9 மணிக்கு முன்னதாகவே மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் மாணவ- மாணவிகள் முககவசம் அணிந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டனர். தேர்வு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கலெக்டர் ஆய்வு

தேர்வுகளை கண்காணிக்க 110 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 2 மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், அனைவருக்கும் கல்வி உதவிதிட்ட அலுவலர் தலைமையிலான பறக்கும்படைகள் தேர்வு களை கண்காணித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 403 மாணவர்கள், 476 மாணவிகள் என மொத்தம் 879 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதி விட்டு திரும்பிய மாணவர்கள் தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர்.

தேர்வுகளை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணன் ஆகியோர் பல்வேறு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

Next Story