2 கைகள் இல்லாவிட்டாலும் நம்பிக்(கை)யுடன் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி
2 கைகள் இல்லாவிட்டாலும் நம்பிக்(கை)யுடன் பிளஸ்-2 தேர்வை மாணவி ஒருவர் எழுதினார்.
மயிலாடுதுறை:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 89 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 5,042 மாணவர்கள், 5,353 மாணவிகள் 36 மையங்களில் தேர்வெழுதினர். இவர்களில் 53 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும் அடங்குவர்.
மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் 2 கைகளும் இல்லாத நிலையில் நம்பிக்(கை)யுடன் பிளஸ்-2 தேர்வை ஆசிரியை உதவியுடன் நேற்று எழுதினார். அந்த மாணவியின் பெயர் லெட்சுமி. வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை மாணவி லட்சுமி கூற அதை ஆசிரியை எழுதினார்.
இந்த மாணவி பிறக்கும்போதே 2 கைகளும் இல்லாததால் அவரை பெற்றோர் பராமரிக்க முடியாமல் கைவிட்டனர். இதனால் அந்த மாணவி மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் சேர்க்கப்பட்டு படித்து வருகிறார். இவர் தனது 2 வயதில் இருந்தே அன்பகத்தில் வளர்ந்து வருகிறார். தனக்கு கைகள் இல்லாததால் பெற்றோர் கைவிட்ட நிலையில் மிகுந்த நம்பிக்(கை)யுடன் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி லெட்சுமியை சக மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் பாராட்டினர்.
---
Related Tags :
Next Story