சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் நாசம்


சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் நாசம்
x
தினத்தந்தி 6 May 2022 12:03 AM IST (Updated: 6 May 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் நாசமாயின.

வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (வயது 69). இவரது மனைவி அமராவதி (62). விவசாயிகளான இவர்களுக்கு அனுக்கூர் கிராம எல்லை அருகே தோட்டம் உள்ளது. தற்போது தோட்டத்தில் பூவன் ரக வாழை மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டத்தில் வாழை மரங்கள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் சுமார் 1,500 வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து விழுந்து நாசமானது. இதுகுறித்து தகவலறிந்த தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் வந்து சாய்ந்த வாழை மரங்களை பார்வையிட்டனர். அவர்களிடம் சூறாவளி காற்றில் விழுந்த நாசமான வாழை மரங்களுக்கு அரசின் இழப்பீடு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடேசன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Next Story