உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் நடுவழியில் நின்ற ரெயில்
ஆம்பூர் அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
ஆம்பூர் அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மின்கம்பி அறுந்து விழுந்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் சென்னை - பெங்களூரு மற்றும் கோயமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மார்க்கத்தில் ரெயில் செல்லும் உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து தொங்கியது.
அப்போது அதிலிருந்து தீப் பொறி ஏற்பட்டது. இதை அந்தவழியாக கேரளாவிற்கு சுண்ணாம்பு ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் டிரைவர் பார்த்து உடனடியாக ரெயிலை நிறுத்திவிட்டு விண்ணமங்கலம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பினனர் காட்பாடி ரெயில் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது..
நடுவழியில் நிறுத்தம்
அதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் கேரள மாநிலம் மங்களூர் நோக்கி செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பச்சகுப்பம் ரெயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ரெயில்வே எலக்ட்ரிக் பிரிவு ஊழியர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி உயரழுத்த மின் கம்பியை நள்ளிரவு 12.30 மணியளவில் சரிசெய்தனர். அதன் பிறகு சரக்கு ரெயில் ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது.
இதனால் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. மேலும் சரக்கு ரெயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. உயழுத்த மின்கம்பி அறுந்து விழுந்த நேரத்தில் சில பயணிகள் ரெயில்கள் தாமதமாக வந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
Related Tags :
Next Story