வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பந்தட்டை
வேப்பந்தட்டை தாலுகா திருவாலந்துறையை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சஞ்சை (வயது21). இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு தனது தாயுடன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவரது தந்தை சக்திவேல் கடந்த ஆண்டு உயிரிழந்தார். தந்தை இறந்ததிலிருந்து சஞ்சை மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது சஞ்சை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் விரைந்து சென்று சஞ்சையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story