குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்
குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் மாவட்ட அளவிலான குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிதி, குழந்தை திருமணம் தடுத்து நிறுத்துதல், குழந்தை தொழிலாளர் தடுப்பது உள்ளிட்ட குழந்தைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குழந்தை சார்ந்த பணிகளில் அதிக கவனம் செலுத்தி திறம்பட செயல்பட துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story