தினத்தந்தி புகார்பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்
டாஸ்மாக் கடைைய வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு ஏராளமான மதுபிரியர்கள் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளனர். போதையில் பலர் தகராறில் ஈடுபடுகின்றனர். அந்த வழியாக செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே அந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகன், வேலூர்
டவுன் பஸ் வசதி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் சேத்துப்பட்டு, வந்தவாசி போன்ற பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். அதேேபால் சேத்துப்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பகுதியில் பணியாற்றி வருகின்றனர். கீழ்பென்னாத்தூர்- சேத்துப்பட்டு நேர்வழியில் அவலூர்பேட்டை வழியாக அரசு பஸ்கள் இயங்காததால் கீழ்பென்னாத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கிருந்து சேத்துப்பட்டு, வந்தவாசிக்கு செல்கின்றனர். இதனால் நேரம், பணம் விரயம் ஆகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கீழ்ெபன்னாத்தூர், சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை வழியாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்.
-விக்ரம், கீழ்பென்னாத்தூர்.
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடிமதுரா மேலக்கொடி கிராமத்தில் 500 பேர் வசிக்கின்றனர். அவர்கள் போளூர் மற்றும் கலசபாக்கம் செல்ல வேண்டுமென்றால் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல ேவண்டும். ஆகையால் போளூர்-கீழ்குப்பம் செல்லும் பஸ்சை (பி4பி) மேலக்கொடி வழியாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கணேசன், கடலாடி.
(படம்) கால்வாயில் இருந்து குப்பைகளை அகற்ற வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி உட்பட்ட கிழக்கு பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் நிரம்பி உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதை நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் இதுவரை பிளாஸ்டிக் குப்பைகளை கழிவுநீர் கால்வாயில் இருந்து அகற்றப்படாமல் உள்ளது. அதிகாரிகள் கவனிப்பார்களா?
-ராஜாராமன், சோளிங்கர்.
பள்ளத்தை சரி செய்ய வேண்டும்
வேலூர் சாய்நாதபுரம் குரு தட்சிணாமூர்த்தி கோவில் அருகே கழிவு நீர் செல்லும் கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. நீண்டநாட்களாகியும் இந்தக் கால்வாய் பள்ளம் சரி செய்யப்படாததால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் இரவு நேரத்தில் நடந்து செல்வோர் கால் தடுமாறி விழுந்து செல்லும் அவலம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தக் கால்வாய் பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஷ்ணுதாசன், வேலூர்.
சிமெண்டு தொட்டியின் மூடி உடைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் ஏ.கஸ்பா அப்புகான் தெருவில் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் கழிவுநீர் தேங்க வைப்பதற்கு தோண்டப்பட்ட தொட்டிகளின் மேல் மூடப்பட்ட சிமெண்ட் மூடிகள் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் அவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. பல மாதங்கள் ஆகியும் நகராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களுக்கு வேதனை அளிக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வேணிமாதவன், ஆம்பூர்.
Related Tags :
Next Story