சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை கட்டிடங்களை காணொலியில் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை கட்டிடங்களை காணொலியில் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை கட்டிடங்களை காெணாலியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதிய கட்டிடம்
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கொந்தகை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் கீழடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் (மூன்று வகுப்பறைகள்) ரூ. 57.42 லட்சத்திலும், கோவிலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் (நூலகம்) ரூ.20.57 லட்சத்திலும், டி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் (இரண்டு வகுப்பறைகள்) ரூ.29.64 லட்சத்திலும், கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 137.10 லட்சத்தில் புதிய கட்டிடம், கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி ரூ.354.66 லட்சத்தில் புதிய கட்டிடம் ஆகிய ஐந்து கட்டிடங்களையும் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கீழடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி குத்துவிளக்கேற்றியும் கட்டிடங்களை பார்வையிட்டார்.
விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், யூனியன் சேர்மன் சின்னையா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, யூனியன் ஆணையாளர் ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி ஆறுமுகம், கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன், கொந்தகை ஊராட்சி தலைவர் தீபலெட்சுமி ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வு
முன்னதாக கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி தலைமையில் ஆசிரிய-ஆசிரியைகள் அனைவரையும் வரவேற்றனர். முன்னதாக அருங்காட்சியக பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story