ஹிஜாப் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம்: 2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஹிஜாப் விவகாரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை,
தஞ்சையை சேர்ந்த ரஜிக் முகமது, நவாப் ஷா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில் கூறியிருந்ததாவது:- ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்க்கும் வகையில் கடந்த மாதம் அதிராம்பட்டினம் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஜமால் முகம்மது என்பவர், மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்திருந்தோம். ஆனால் எங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தது ஏற்புடையதல்ல. எனவே எங்களுக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். ஏற்கனவே இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார். இந்தநிலையில் இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story