மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ரியல் எஸ்டேட் அதிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ரியல் எஸ்டேட் அதிபர் பலி
x
தினத்தந்தி 6 May 2022 1:40 AM IST (Updated: 6 May 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

மானூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பரிதாபமாக இறந்தார்.

மானூர்:
மூன்றடைப்பு அருேக உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் டேவிட் (வயது 55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தொழில் சம்பந்தமாக தனது சகோதரர் முருகேசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் எட்டான்குளம்-மானூர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார். மானூர் அருகே வந்தபோது, எதிரே எட்டான்குளத்தை சேர்ந்த முத்துப்புதியவன் (46) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இதில் டேவிட், முருகேசன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டேவிட் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story