சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 722 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை 15,722 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 585 பேர் தேர்வு எழுதவரவில்லை.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை 15,722 பேர் எழுதினார்கள். விண்ணப் பித்தவர்களில் 585 பேர் தேர்வு எழுதவரவில்லை.
பொதுத்தேர்வு
பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரி்ல் சென்று பார்வையிட்டார். அவருடன் முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி ஆகியோர் உடன் சென்றனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை மற்றும் மானாமதுரை ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவைகளில் மொத்தம் 77 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 7,539 மாணவர்கள் மற்றும் 8,768 மாணவிகள் சேர்த்து மொத்தம் 16,307 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
வசதி
அதில், நேற்று நடைபெற்ற தேர்வை 7,252 மாணவர்களும், 8,470 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 15,722 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 287 மாணவர்கள் மற்றும் 298 மாணவிகள் சேர்த்து மொத்தம் 585 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு வருகை தரவில்லை. மேலும் தேர்வு மையங்களில் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் மற்றும் மின்விசிறிகள் வசதி ஆகியவைகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story