‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் வசதி வேண்டும்
ராமநாதபுரத்தில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. இந்த சந்தையில் பொருட்கள் வாங்க, விற்க சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் வருவர். இங்கு வருவதற்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சந்தைக்கு வருவோர் ஊர் திரும்ப சிரமப்படுகின்றனர். எனவே மக்கள் நலன் கருதி கூடுதல் பஸ்களை இப்பகுதியில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகூர், கீழக்கரை.
விளையாட்டு மைதானம்
மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லை. சிறியவர்கள், பெரியவர்கள் மற்றும் முதியோர்கள் நடக்க, விளையாட மற்றும் பயிற்சி பெற பல கிலோமீட்டா் சென்று நகர்ப்பகுதிக்கு வரும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரவேண்டும். கோபிநாத், சிந்தாமணி.
அசம்பாவிதம் தவிர்க்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அனுப்பங்குளம் அருகே உள்ள மீனம்பட்டியில் வடக்கத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக பணி தற்ேபாது நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் மேற்புறம் உயர்மின் அழுத்த கம்பிகள் செல்கிறது. இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வேலையாட்கள் அச்சத்துடனே பணி மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிலின் மேல் செல்லும் மின்கம்பிகளை அகற்றி வேறுபகுதியில் மாற்றி அமைக்க வேண்டும்.
விநாயகமூர்த்தி, மீனம்பட்டி.
பழுதடைந்த சாலை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மகாலட்சுமி கோவில் 5-வது தெரு, சோலையழகுபுரம் 1-வது தெரு பகுதி சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
கோவிந்தராஜன், ஜெய்ஹிந்த்புரம்.
சாலையில் திரியும் கால்நடைகள்
சிவகங்கை மாவட்ட நகர்ப்பகுதியில் ஆடுகள், மாடுகள், கழுதைகள் போன்ற கால்நடைகள் அதிக அளவில் சாலையில் நடமாடுகின்றன. காலையில் சாலையில் சுற்றித்திரிந்து வாகனங்களுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இரவில் சாலையில் படுத்து உறங்குகின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
அகிலா, சிவகங்கை.
பணி விரைந்து முடிக்கப்படுமா?
மதுரை மாவட்டம் தேனி செல்லும் மெயின்ரோட்டில் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பகுதியில் மழை பெய்து தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சிவக்குமார், மதுரை.
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் வினியோகிக்கப்பட்டு பல வாரங்கள் ஆவதால் இப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்படுகின்றனர். தண்ணீருக்காக பல கிேலா மீட்டர் தூரம் சென்று வருகின்றனர். சிலா் குடிநீரை காசு கொடுத்தும் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, அதிகாரிகள் இப்பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விஷ்ணு, கமுதி.
சிலை பராமரிக்கப்படுமா?
மதுரை மாவட்டம் பரவையில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிலையின் மேல்தளத்தில் போடப்பட்டுள்ள தகரமானது தற்போது துருப்பிடித்து சேதமடைந்து உள்ளது. இதனால் மழைநீர், வெயிலால் சிலை சேதமாகும் நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புது தகரம் அமைத்து சிலையை பாதுகாக்க வேண்டும்.
காந்திபாஸ்கரன், பரவை.
தேங்கிய கழிவுநீர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு-மகாராஜபுரம் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதியும் இல்லை. இதனால் பள்ளமான சாலையிலேயே கழிவுநீரானது தேங்கி அப்பகுதியில் ஓடுகிறது. தேங்கிய கழிவுநீரால் அப்பகுதி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைத்து இப்பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
சுகி, மகாராஜபுரம்.
வேகத்தடை தேவை
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு-தத்தனேரி ரயில்வே கேட் சுரங்க பாதையை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் சிறு, சிறு விபத்துகள் தினமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்த சுரங்கப்பாதை சாலையில் வேகத்தடை அமைத்து விபத்து நிகழ்வதை தடுக்க வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
Related Tags :
Next Story