வாலிபரிடம் திருட்டுபோன 5 பவுன் சங்கிலி நூதன முறையில் மீட்பு


வாலிபரிடம் திருட்டுபோன 5 பவுன் சங்கிலி நூதன முறையில் மீட்பு
x
தினத்தந்தி 6 May 2022 2:22 AM IST (Updated: 6 May 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே வாலிபரிடம் திருட்டுபோன 5 பவுன் சங்கிலி நூதன முறையில் மீட்கப்பட்டது.

திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரம் சந்தனபதி அய்யா கோவில் திருவிழா அன்று இரவில் நண்பர்கள் 10 பேர் சேர்ந்து அங்குள்ள இசக்கியம்மன் கோவில் அருகே படுத்து தூங்கினர். அப்போது வில்சன் (வயது 28) என்பவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது. இதுகுறித்து வில்சன் கொடுத்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன், ஏட்டு தங்கராஜ் ஆகியோர் அவரது நண்பர்களை தனித்தனியே அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் ஒருவர் தங்க சங்கிலியை எடுத்து இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து நண்பர்களிடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க திருட்டுபோன நகையை மீட்க போலீசார் நூதன முறையை கையாண்டனர். அதன்படி, அனைவரும் இரவில் படுத்திருந்த இடத்தில் காணாமல் போன தங்க சங்கிலியை தேட வேண்டும். அப்போது நாங்கள் யாரை சந்தேகப்படுகிறோமா அவரும் தேடுவது போல் தேடி தங்க சங்கிலியை அங்கு போட்டு விட வேண்டும். அதை யார் எடுக்கிறாரோ அவர் எங்களிடம் ஒப்படைத்து விடுவார் என்றனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு அந்த இடத்தில் அனைவரும் தங்க சங்கிலியை தேடியபோது, அதை ஏற்கனவே எடுத்து இருந்தார் கீழே போட்டு விட்டார். அந்த நகையை போலீசார் மீட்டு வில்சனிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Next Story