கோலார் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை
கோலார் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் 20 ஏக்கரில் நெற்பயிர்கள் நாசமானது.
கோலார்: கோலார் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் 20 ஏக்கரில் நெற்பயிர்கள் நாசமானது.
கனமழை
கோலார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக பங்காருபேட்டை மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் இரவு விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தாலுகா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்தது.
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் இருளில் மூழ்கி தவித்தனர். சாலை ஓரங்களில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்திருந்தார். ஆலங்கட்டி மழைக்கு வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பிரசாத்துக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மின்னல் தாக்கில் பசு சாவு
பூதிகோட்டை வருவாய் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மராட்டிய ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவருக்கு சொந்தமான ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பசுமாடு வீட்டின் எதிரே உள்ள கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின்பொது மின்னல் தாக்கி கிருஷ்ணப்பாவுக்கு சொந்தமான பசு பரிதாபமாக செத்தது.
ராபேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கலீல், திம்மாரெட்டி, ராமப்பா ஆகியோருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த வெள்ளரிக்காய் செய்திகள் நாசமாகின.
15 ஏக்கரில் நெற்பயிர்கள் நாசம்
அதேபோல் மூத்தனூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ், குப்பையா, சுரேஷ் வெங்கடேசப்பா, முனிவெங்கடப்பா, பையப்பண்ணா, வேணுகோபால் ஆகியோர் 20 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தனர். ஆலங்கட்டி மழையால் நெல் சாகுபடி முற்றிலும் நாசமாயின.
பங்காருபேட்டை தாலுகாவில் விவசாயிகள் 15 ஹெக்டர் நிலத்தில் காய்கறிகள், தங்காளி போன்றவற்றை சாகுபடி செய்திருந்தனர். ஆலங்கட்டி மழைக்கு மேற்கண்ட சாகுபடி பயிர்கள் முற்றிலும் நாசமாகின. இதனால் தாலுகா முழுவதும் விவசாயிகள் பெரும் கவலைக்கு ஆளாகி உள்ளனர்.
Related Tags :
Next Story