90 வயது பாட்டியை உயிரோடு எரித்துக்கொன்ற பேத்திகள் கைது
நெல்லை அருகே பெண் கொலையில் திடீர் திருப்பமாக 90 வயது பாட்டியை உயிரோடு எரித்துக்கொன்ற 2 பேத்திகள் கைது செய்யப்பட்டனர்.
பேட்டை:
நெல்லை அருகே பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3-ந் தேதி பெண் எரித்துக்கொைல செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பதிவான செல்போன் சிக்னல், கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், அந்த பெண் ெகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதாவது, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பழைய பேட்டை கண்டியபேரியை சேர்ந்த சுப்பம்மாள் (வயது 90) என்பதும், அவரை பேத்திகள் 2 பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலும் விசாரணையில் வெளியானது. அதுபற்றி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
சுப்பம்மாள் மகள் வழி பேத்திகள் பேட்டை செக்கடியை சேர்ந்த லட்சுமணன் மனைவி மேரி (38), கண்டியபேரி அருகே உள்ள கிருஷ்ணபேரியைச் சேர்ந்த ெபான்அழகு மனைவி மாரியம்மாள் (40). இதில் மேரி தனது பாட்டி சுப்பம்மாளை சில ஆண்டுகளாக பராமரித்து வந்தார். ஆனால், நாளடைவில் அவரால் தொடர்ந்து பராமரிக்க முடியாததால், தனது சகோதரியான மாரியம்மாள் வீட்டில் கொண்டு போய் விட்டார். ஆனால், அவரும் பராமரிக்க சிரமப்பட்டு வந்தார்.
இதையடுத்து 2 பேரும் சேர்ந்து சுப்பம்மாளை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 3-ந் தேதி ஒரு ஆட்டோவில் சுப்பம்மாளை அழைத்துக் கொண்டு மேரி, மாரியம்மாள் ஆகியோர் ஆதம்நகர் பகுதிக்கு ெசன்றனர். பின்னர் ஆட்டோவை அங்கு இருந்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சுப்பம்மாளை அழைத்துக் கொண்டு அங்குள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றனர். மாரியம்மாள் தான் கொண்டு வந்த போர்வையை தலையணையாக வைத்து அதில் சுப்பம்மாளை படுக்க வைத்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து சுப்பம்மாள் மீது ஊற்றி உயிரோடு தீவைத்து எரித்துக் கொலை ெசய்யதாக கூறப்படுகிறது.
பின்னர் மாரியம்மாள் தான் வந்த ஆட்டோவை மீண்டும் வரவழைத்து அதில் ஏறி வீட்டிற்கு சென்றார். மேரி நடந்ேத தனது வீட்டிற்கு சென்றது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொடூரக் கொலை தொடர்பாக மாரியம்மாள், மேரியை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை அருகே 90 வயது பாட்டியை அவரது 2 பேத்திகளே எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story