வனத்துறைக்கு தவறான தகவல் கொடுத்தவருக்கு அபராதம்
கடையம் அருகே வனத்துறைக்கு தவறான தகவல் கொடுத்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடையம்:
கடையம் அருகே உள்ள பால்வண்ணநாதபுரத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில் கடையம் வனத்துறையினர் பால்வண்ணநாதபுரம் பகுதியில் உள்ள சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பால்வண்ணநாதபுரத்தை சேர்ந்த யோவான் மகன் பால்ஜெகன் குடும்ப தகராறு காரணமாக வனத்துறையினருக்கு தவறான தகவலை தெரிவித்தது தெரியவந்தது. மேலும் அவர் பாம்பை கொன்று, அதை செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து துணை இயக்குனர் உத்தரவுப்படி பால்ஜெகனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story