கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 லட்சம் செல்போன்கள் திருட்டு
கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 லட்சம் செல்போன்கள் திருட்டு புளியங்குடியில் கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 லட்சம் செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
புளியங்குடி:
புளியங்குடி பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இங்கு நாகராஜன் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. நேற்று வணிகர் தின மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாகராஜன் சென்றதால், அவரது கடை பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் மாலையில் நாகராஜனின் சகோதரர் மற்றும் கடை ஊழியர்கள் கடையை திறந்தனர்.
அப்போது கடையின் சுவரில் துளையிடப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனது தெரியவந்தது. நள்ளிரவில் மர்மநபர்கள் கடையின் சுவரில் துளையிட்டு கைவரிசை காட்டி சென்றது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story