கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்-போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பேச்சு


கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்-போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பேச்சு
x
தினத்தந்தி 6 May 2022 3:41 AM IST (Updated: 6 May 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பேசினார்.

சேலம்:
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பேசினார்.
கண்காணிப்பு கேமராக்கள்
சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 175 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் செயல்பாட்டை தொடங்கி வைக்கும் விழா நேற்று அண்ணா பூங்கா அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 
விழாவுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கினார். போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
வணிகர்களுக்கு பாதுகாப்பு
போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் வரவேற்றார். இதையடுத்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத்தொடர்ந்து 175 கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-
சேலம் செவ்வாய்பேட்டை பகுதி வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள இடமாகும். இதனால் பொதுமக்கள் அதிகளவு வந்து செல்வார்கள். ஒரு கண்காணிப்பு கேமரா என்பது 20 முதல் 25 போலீசாருக்கு சமமாக பணியாற்ற கூடியது. சாலையில் 30 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்துவது எனது லட்சியம் ஆகும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் வணிகர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் கும்மராஜா நன்றி கூறினார்.

Next Story