சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 6 May 2022 3:42 AM IST (Updated: 6 May 2022 3:42 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நெல்லை:
ஷவர்மா சுகாதாரமான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா? என பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகில் உள்ள சாலையோர கடைகளில் நேற்று மாலையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா தலைமையில் அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன், கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். 

அப்போது சுகாதாரமற்ற முறையில் இருந்த 8 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் தரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்களையும், மூடி வைக்காத உணவு தயாரிப்பு பொருட்களையும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

Next Story