தலைவாசல் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
தலைவாசல் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே கவர்பனை கிராமத்தின் வழியே சுவேத நதி செல்கிறது. சுவேத நதியில் இரவு நேரத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை பின்னனூர் பிரிவு ரோட்டில் வீரகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி தலைமையில் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி, வருவாய் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணலுடன் வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. அதனை 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் வாகனத்தில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கவர்பனையை சேர்ந்த பால்பாண்டி (வயது 32), சிவக்குமார் (27) என்பதும், சுவேத நதியில் இருந்து மணலை கடத்தி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story