பூலாம்பட்டியில் தூய்மைப்பணியாளர் ஆற்றில் மூழ்கி சாவு
பூலாம்பட்டியில் தூய்மைப்பணியாளர் ஆற்றில் மூழ்கி இறந்தார்.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 59). இவர் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி தமிழரசி. கடந்த 3-ந் தேதி உறவினர் திருமணத்திற்காக வாழப்பாடி சென்று நேற்று வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் கணவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழரசி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேடினார். அப்போது பூலாம்பட்டி மீன் சந்தை பின்புறம் தங்கராஜ் துணிகள் ஆற்றின் படித்துறை படியின் மீது கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தங்கராஜின் மருமகன் ராஜேந்திரன் என்பவர் ஆற்றில் இறங்கி பார்த்துள்ளார். அப்போது அவருடைய உடல் ஆற்றுக்குள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறும் போது, தங்கராஜ் ஆற்றில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார் என்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story