வணிகர் தினம்: சேலத்தில் கடைகள் அடைப்பு
வணிகர் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.
சேலம்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தினத்தையொட்டி திருச்சியில் நேற்று வணிகர் மாநாடு நடைபெற்றது. இதையொட்டி சேலம் செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட், சின்ன கடைவீதி, கருங்கல்பட்டி, அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, அழகாபுரம், சூரமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் சேலத்தில் இருந்து திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டனர். இதனால் சேலத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக செவ்வாய்பேட்டை, லீபஜார், சின்னக்கடை வீதியில் உள்ள சில்லரை மற்றும் மொத்த கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
கெங்கவல்லி பகுதியில் நேற்று வணிகர்கள் தினத்தையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் வணிகர் சங்க தலைவர் ஆண்டோ மொராய்ஸ், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் வணிகர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வணிகர்களின் ஊர்வலம் நடந்தது.
Related Tags :
Next Story