4 கைதிகள் மீது வழக்கு


4 கைதிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 May 2022 4:57 AM IST (Updated: 6 May 2022 4:57 AM IST)
t-max-icont-min-icon

4 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.கே.நகர்:
திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் என ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று காலை சிறைக்காவலர் சந்துரு பணியில் இருந்தார். அப்போது சிறையில் வேலை செய்து கொண்டிருந்த விசாரணை கைதியான அழகுராஜா என்பவர், பின்னர் காவலரின் அனுமதியின்றி வேலை செய்யாமல் அங்கிருந்து சென்றுள்ளார். இதுபற்றி காவலர் கேட்டபோது, அவரை அழகுராஜா கீழே தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து அழகுராஜாவை சிறை அலுவலகத்துக்கு அழைத்தபோது, அவர் அங்கு செல்லாமல் தடுப்புக் காவல் கைதிகளான பிரசாந்த், நாகராஜ், விசாரணை கைதியான விக்கிபாபு ஆகியோரை அழைத்துக்கொண்டு, மரத்தில் ஏறி கூச்சல் போட்டு கலாட்டா செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயிலர் சண்முகம் கே.கே.நகர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் 4 கைதிகள் மீதும் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story