கொண்டலாம்பட்டி அருகே 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


கொண்டலாம்பட்டி அருகே 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x
தினத்தந்தி 6 May 2022 5:00 AM IST (Updated: 6 May 2022 5:00 AM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டி அருகே 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.

கொண்டலாம்பட்டி:
வேலூர் மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் அனிஷ் கிருஷ்ணா (வயது 21). இவர் கொண்டலாம்பட்டி அருகே அரியானூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து வருகிறார். இதே கல்லூரியில் அரியானூரை சேர்ந்த சுந்தரகுமார் மகன் பாபு (22) என்பவரும் படித்து வருகிறார். அனிஷ்கிருஷ்ணா, பாபு ஆகியோர் அரியானூரில் ஒரு ஓட்டலில் வாடகைக்கு அறை  எடுத்து தங்கி படித்து வருகின்றனர். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று திரும்பிய 2 பேரும், தாங்கள் தங்கி உள்ள ஓட்டலுக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். வாசலில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு சென்ற அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்ெறாருவரின் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டுப்போன 3 மோட்டார் சைக்கிள்களையும் தேடி வருகிறார்கள்.

Next Story