ஆழ்துளை கிணறு அமைக்கும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ஆழ்துளை கிணறு அமைக்கும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 6 May 2022 7:58 AM IST (Updated: 6 May 2022 7:58 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

திருத்தணி, 

திருத்தணியை அடுத்த ராமஞ்சேரியில் வசிப்பவர் சங்கர் (வயது 55). இவர் வீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

அந்த பணியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராக்கேஷ் குமார் (வயது 20) என்பவர் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது இரும்பு பழுப்புகளை எடுக்க வாகனம் மீது ஏறியபோது மேலே சென்ற மின்சார கம்பியின் மீது உரசியது.

இதில் மின்சாரம் தாக்கியதில் ராக்கேஷ் குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story