சென்னை மாநகராட்சி பகுதிகளில் 3,300 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - நாளை மறுநாள் நடக்கிறது


சென்னை மாநகராட்சி பகுதிகளில் 3,300 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 6 May 2022 8:51 AM IST (Updated: 6 May 2022 8:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 3,300 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

சென்னை,  

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். கமிஷனர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா கூறியதாவது:-

சென்னையில் நாளை மறுநாள், 3,300 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தப்பட உள்ளது. இந்த முகாமிற்காக 1,600 குழுக்கள் அமைக்கப்பட்டு, வார்டுக்கு ஒரு முகாம் என 200 நிலையான முகாம்களும், மீதமுள்ள 1,400 குழுக்கள் 3,100 இடங்களில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story