மங்களூருவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வங்க புலி கொண்டு வரப்பட்டது


மங்களூருவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வங்க புலி கொண்டு வரப்பட்டது
x
தினத்தந்தி 6 May 2022 9:42 AM IST (Updated: 6 May 2022 9:42 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு வங்கபுலி கொண்டு வரப்பட்டு உள்ளது.

சென்னை, 

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள பிலிகுலா உயிரியல் பூங்கா இடையே விலங்குகள் பரிமாற்றம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை விலங்குகள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் வெள்ளை புலி மற்றும் ஒரு பெண் நெருப்புக்கோழியை பிலிகுலா உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல் பிலிகுலா உயிரியல் பூங்காவிலிருந்து 2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்க புலி, 2 ஜோடி நீக்கத்தான் பாம்பு மற்றும் ஒரு ஜோடி மண்ணுளி பாம்பு ஆகியவை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

புதியதாக கொண்டு வரப்பட்ட விலங்குகள் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவுற்ற பிறகு, கால்நடை டாக்டர்களின் மருத்துவச் சான்றின்படி விலங்குகள் இருப்பிடத்துக்கு மாற்றப்படும்.

பின்னர் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும். மேற்கண்ட தகவல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story