ஆறுமுகநேரியில் பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது
ஆறுமுகநேரியில் டிரைவரிடம் அரிவாளை காட்டி பணம் வழிப்பறி செய்த பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் டிரைவரிடம் அரிவாளை காட்டி பணம் வழிப்பறி செய்த பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அரிவாளை காட்டி வழிப்பறி
ஆறுமுகநேரி ராஜமன்யபுரம் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் மாணிக்கம் (வயது 26). டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து திருச்செந்தூர் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் அவர் ஆறுமுகநேரி திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆறுமுகநேரி சினந்தோப்பு விலக்குப் பகுதியில் வந்தபோது அவரை, ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த பெருமாள் முருகன் என்ற பாம்பே முருகன்(42), யோவான் மகன் ஜெபராஜ்(22), முத்து மகன் சதீஷ்(22) அரிவாளை காட்டி மிரட்டி தடுத்து நிறுத்தினர். பணம் கொடுத்து விட்டு செல்லுமாறு மீண்டும் அரிவாளை காட்டி அவரிடம் 3 பேரும் மிரட்டினர். அவரோ பணம் இல்லை என்று கூறியதும், ஜெபராஜ் அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்து 500-ஐ பறித்துள்ளார்.
கொலை மிரட்டல்
அந்த பணத்தை வைத்து கொண்ட 3 பேரும் வழிப்பறி செய்ததை வெளியே சொல்லக்கூடாது, மீறி போலீசாரிடம் சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவோம் என அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாணிக்கம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ெசந்தில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வழிப்பறி கும்பலை தேடி சென்றனர்.
பிரபல ரவுடி கைது
அப்போது சீனந்தோப்பு விலக்கு பகுதியில் பதுங்கி இருந்த பாம்பே முருகன், ஜெபராஜ், சதீஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது, மாணிக்கத்திடம் அரிவாளை காட்டி பணம் பறித்ததை 3 பேரும் ஒப்புக் கொண்டனர். இதை தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாம்பே முருகன் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது ஏற்கனவே ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு உட்பட 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story