கலவை அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு


கலவை அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 6 May 2022 6:27 PM IST (Updated: 6 May 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

கலவை அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவமனையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். தீயணைப்பு பைப்புகள் எவ்வாறு செயல்படுகிறது என ஆய்வு செய்தார். 

அப்போது மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் தாலுகா மருத்துவமனையாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தேவையான மருந்துகள், பணியாளர்கள் குறித்தும் கேட்டறிந்தார். 

மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்ணிலா, உதவி எழுத்தர் சக்திவேல் மற்றும் மருந்தாளுனர், செவிலியர்கள், தீயணைப்பு துறையினர் உடன் இருந்தனர்.

Next Story