பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்


பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 6 May 2022 7:05 PM IST (Updated: 6 May 2022 7:05 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் பட்டா வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பட்டா வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் எம்.காசி தலைமை வகித்தார். கன்வீனர் கேசவன், ரவி, வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், இந்துமதி தொடங்கிவைத்து பேசினார்கள்.  நல்லசிவம், செல்வம், சிங்காரம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தண்ணீர் தேங்காத மற்றும் இனிமேல் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லாத நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கோர்ட்டு தீர்ப்பை காரணம் காட்டி வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Next Story