தூத்துக்குடி மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் கொளுத்தியது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 101 டிகிரி வெயில் அடித்தது. இதனால் பெரும்பாலான மக்கள் பகலில் வீடுகளில் முடங்கினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 101 டிகிரி வெயில் அடித்தது. இதனால் பெரும்பாலான மக்கள் பகலில் வீடுகளில் முடங்கினர்.
வெயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வந்தது. பகல் நேரத்தில் கடுமையான வெயிலுடன், அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இரவு நேரத்திலும் வெப்பம் அதிகமாக இருந்ததால் தூங்க முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியது. அன்றைய தினம் மதியத்துக்கு பிறகு மாவட்டத்தில் பல இடங்களில் சாரல் மழை பெய்து இதமான சூழல் நிலவியது.
101 டிகிரி
ஆனால் மறுநாள் முதல் மீண்டும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்தது. நேற்று காலை முதல் கடுமையான வெயில் மக்களை வாட்டி எடுத்தது. அதிகபட்சமாக நேற்று 101 டிகிரி வெயில் அடித்தது. இதனால் மதிய நேரங்களில் வாகன ஓட்டிகள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களிலும், சாலையோர குளிர்பான கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பகலில் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.
Related Tags :
Next Story