செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் அன்னமுத்திரி பிரசாதம் வினியோகம்
செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பக்தர்களுக்கு அன்னமுத்திரி பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த 30-ந் தேதி இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜையுடன் தொடங்கியது. மே.2-ந்தேதி முதல் மே.5-ந்தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை முழு நேர சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு திரைபட கச்சேரி, நகைச்சுவை பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான குடும்பத்தினர் கோவில் வளாகத்தில் தங்கி சாமி தரிசனம் செய்து வந்தநிலையில், வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்தனர். மாலை 3 மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜையும், தொடர்ந்து மாலை 4 மணிக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்ன முத்திரி பிரசாதத்தை வாங்கி சென்றனர். இந்த பிரசாதம் புனிதமாக கருதப்படுவதால் பக்தர்கள் வாங்கிச் செல்லும் இந்த பிரசாதத்தை காய வைத்து தினமும் தங்கள் வீடுகளில் சமைக்கும் சாப்பாட்டில் சேர்ப்பார்கள். எனவே இந்த பிரசாதம் வாங்க தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இன்று(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் வெங்கடேஷ், தக்கார் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் சாந்திதேவி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story