திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா


திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 6 May 2022 9:05 PM IST (Updated: 6 May 2022 9:05 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா நடந்தது.

கோபால்பட்டி:
திண்டுக்கல் அருகேயுள்ள புகையிலைபட்டி வண்டிக்காரன் குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக குளக்கரையில் உள்ள கன்னிமார் சாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் புகையிலைபட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு வலை, மூங்கில் கூடைகளை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, கெண்டை, விரால் உள்பட பல ரக மீன்கள் பிடிபட்டன. பல வருடங்களுக்கு பிறகு குளத்தில் தண்ணீர் நிரம்பி மீன்பிடி திருவிழா நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


Next Story