கொடைக்கானலில் சவர்மா தயாரிக்கும் கடைகளில் அதிகாரிகள் சோதனை ரூ.3 ஆயிரம் அபராதம் விதிப்பு
கொடைக்கானலில் சவர்மா தயாரிக்கும் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கொடைக்கானல்:
கேரளாவில் சவர்மா சாப்பிட்ட ஒரு பெண் மரணம் அடைந்தார். அத்துடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்ட பலர் பாதிக்கப்பட்டனர். எனவே அனைத்து ஓட்டல்களிலும் சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ் தலைமையில் குழுவினர் கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் உள்ள ஒரு ஒட்டலில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சவர்மா தயார் செய்ய வைத்திருந்த 1 கிலோ பழைய கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் ஓட்டலின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல அப்சர்வேட்டரி ரோடு, அண்ணா சாலை உள்பட நகரில் உள்ள அனைத்து சவர்மா விற்பனை செய்யும் ஓட்டல்களிலும் சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கூறுகையில், தரமற்ற முறையில் சவர்மா தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story