பெங்களூரு மாநகராட்சியில் 51 ஆஸ்பத்திரிகள் சுகாதாரத்துறைக்கு மாற்றம்
பெங்களூரு மாநகராட்சியில் 51 ஆஸ்பத்திரிகள் சுகாதாரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
பெங்களூரு: பெங்களூருவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 51 ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆஸ்பத்திரிகள் மாநில அரசின் சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது 35 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பிற சுகாதார மையங்கள் என மொத்தம் 51 ஆஸ்பத்திரிகள் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.
அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டு இருக்கின்றன. மாநிலம் முழுவதும் சுகாதார மையங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
Related Tags :
Next Story