உத்திர ரங்கநாத பெருமாள் கோவிலில்சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடந்தது.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடந்தது.
தேரோட்டம்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பாலாற்றங்கரை ஓரம் அமைந்துள்ள உத்திர ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து பெருமாள் சூரிய பிரபை வாகனம், சந்திர பிரபை, அனுமந்த வாகனம், கருட வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
7-ம் நாள் காலை தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி 35 அடி உயரம் கொண்ட தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் உத்திர ரங்கநாத பெருமாள் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது.
பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரைவடம் பிடித்து இழுந்தனர். அப்போது சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது தூவிகோவிந்தா கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய வீதிகளின் வழியாக சென்று மதியம் 1.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, ராமமூர்த்தி மற்றும் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தையொட்டி குடியாத்தம்- பள்ளிகொண்டா சாலையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.
Related Tags :
Next Story