தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 May 2022 10:03 PM IST (Updated: 6 May 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:

பயணிகள் நிழற்குடை அவலம் 
திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு சோலைநகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. ஆனால் அதன் உள்ளே காலி மதுபாட்டில்கள், குப்பைகள் கிடப்பதோடு மிகவும் அசுத்தமாக இருக்கிறது. இதனால் பெண்கள் உள்பட அனைத்து பயணிகளும் நிழற்குடை உள்ளே அமரமுடியவில்லை. எனவே பயணிகள் நிழற்குடையை சுத்தம் செய்ய வேண்டும். -சிவசக்தி, ஏ.வெள்ளோடு.

அடிப்படை வசதிகள் தேவை
தேனி அருகே உள்ள கோவிந்தநகரில் போதிய அளவில் சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஸ்ரீஅஞ்சனா, தேனி.

அபாய மின்கம்பம் 
திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள ஏ.கே.எம்.ஜி.நகர் 5-வது தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துவிட்டது. இதனால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடவேண்டும்.-மதுரைவீரன், திண்டுக்கல்.

பயணிகள் நிழற்குடை தேவை

ஆண்டிப்பட்டி புறநகர் பஸ்நிறுத்தத்தில் பயணிகளுக்கு நிழல் கொடுத்த மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இதனால் பயணிகள் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். -நந்தகோபால், ஆண்டிப்பட்டி.

புதர் மண்டிய பொதுக்கழிப்பறை

கொடைக்கானல் ஒன்றியம் காமனூர் ஊராட்சி 4-வது வார்டில் உள்ள பொதுக்கழிப்பறை புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் மக்கள் அங்கு செல்வதற்கு  பயமாக இருக்கிறது. எனவே புதர்களை அகற்றி, கழிப்பறையை முறையாக பராமரிக்க வேண்டும். -வேளாங்கன்னி ஆனந்தராஜ், காமனூர்.




Next Story