பர்கூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது


பர்கூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 6 May 2022 10:08 PM IST (Updated: 6 May 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

பர்கூர்:
பர்கூர் அருகே காரகுப்பம் ஊராட்சி கொட்லேட்டி கிராமத்தில் இருந்து இருளர் காலனிக்கு செல்லும் சாலையில் சின்ன ஏரி குட்டையில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த சாலையில் சென்ற டிப்பர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 5 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை மீட்டனர்.

Next Story