கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 103 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 24,742 பேர் எழுதினர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 103 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 24,742 பேர் எழுதினர். 2,056 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 103 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 24,742 பேர் எழுதினர். 2,056 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 272 அரசு பள்ளி, 8 அரசு உதவி பெறும் பள்ளி, 135 தனியார் பள்ளிகள் உள்பட 415 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த பொதுத்தேர்வை 24 ஆயிரத்து 742 மாணவ-மாணவிகள் எழுதினர். 2,056 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
இதற்காக மாவட்டம் முழுவதும் 103 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் நடந்த பொதுத்தேர்விற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுத வந்தனர்.
பறக்கும் படை
மாணவ-மாணவிகளுக்கு முககவசம், சானிடைசர் வழங்கி ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பினர். தேர்வையொட்டி தேர்வு மையங்களுக்கு 103 முதன்மை கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள் மற்றும் 29 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story