கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனு கொடுக்கும் போராட்டம்
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு வட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கி பேசினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சக்தி, வட்டக்குழு உறுப்பினர் சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கிருஷ்ணகிரி வட்டத்தில் நீண்ட காலமாக சாகுபடி செய்யும் நிலங்களுக்கும், குடியிருந்து வரும் வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்றும், ஓடை புறம்போக்கு என்றும் நோட்டீஸ் கொடுத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தாலுகா அலுவலகத்தில் மனுக்களை வழங்கினர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் அனுமப்பா, சந்திரசேகர், சுசிலா, தாமரைச்செல்வி, தெய்வானை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தாசில்தார் குருநாதனிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story