ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கில் பணம் எடுத்து மோசடி


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கில் பணம் எடுத்து மோசடி
x
தினத்தந்தி 6 May 2022 10:09 PM IST (Updated: 6 May 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கில் பணம் எடுத்து மோசடி

சிவகங்கை
சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 67). பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. 
அதில் அவருடைய பான் கார்டை இணைக்க சொல்லி இருந்தது. இதைத்தொடர்ந்து அழகுமுத்து தன்னுடைய பான் கார்டு விவரங்களை தெரிவித்தார். இதன் பின்னர் அவருடைய கணக்கில் இருந்து ரூ. 74,997 எடுத்து விட்டார்களாம். இதுகுறித்து அழகுமுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி, ஏட்டு ஸ்ரீதரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story