அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள்


அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள்
x
தினத்தந்தி 6 May 2022 10:11 PM IST (Updated: 6 May 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

நல்லம்பள்ளி:-
நல்லம்பள்ளி அருகே உம்மியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.50 லட்சத்தில் கல்வி சீர்வரிசை பொருட்கள் மற்றும் அலுவலகம், கலையரங்கம் கட்டி கொடுக்கப்பட்டது. இதற்கு உதவிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்மன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊர் முக்கிய பிரமுகர்கள் பன்னீர்செல்வம், மாதையன், முருகேசன், ஆசிரியர் இன்பசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் ஆகியோர் கலந்து கொண்டு அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டி கொடுத்த நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பார்வையிட்டனர்.  முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Next Story