20 கிலோ கோழிக்கறி பறிமுதல்
ரசாயனம் பூசப்பட்ட 20 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கடை களில் அதிரடி சோதனை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் லிங்கவேல், ஜெயராஜ் ஆகியோர் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். மாவட்டத்தில் மொத்தம் 19 சவர்மா கடைகள் உள்ளதாகவும் இதில் இதுவரை 11 கடைகளில் சோதனை நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித் தனர். இந்த சோதனையின்போது சாப்பிட லாயக்கற்ற ரசாயனம் பூசப்பட்ட 20 கிலோ கோழிக்கறியும், 2 கிலோ கெட்டுப்போன பழைய கோழிக்கறியும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும் சுகாதாரமற்ற முறையில் கடைகளை வைத்திருந்ததாக 11 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர 5 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story