தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபர் கைது
தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே ஒன்டிவீரன் நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தங்கச்சிமடம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் ராமேசுவரம் ஒண்டிவீரன் நகர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் மெய்யம்புளியை சேர்ந்த ராஜசேகர் என்பவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மெய்யம் புளி பஸ் நிறுத்தம் பகுதியில் வைத்து வாக்குவாதம் நடை பெற்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இளைஞர் ஹரிஹரன் ராஜசேகர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த அவர் இரு சக்கர வாகனத்தை திருடியதுடன் அதை ஒண்டிவீரன் நகர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் போட்டு தீவைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர். பி்னனர் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story